Asianet News TamilAsianet News Tamil

முறையற்ற உறவு.. நேரில் பார்த்த அபயா கொலை.. 28 ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியாருக்கும், செபிக்கும் ஆயுள் தண்டனை..!

கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் நேற்று குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

Sister Abhaya Murder case... Kerala Catholic Priest, Nun Get Life Imprisonment
Author
Kerala, First Published Dec 23, 2020, 1:36 PM IST

கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் நேற்று குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா(19). இவர் அங்குள்ள செயின்ட் பயன் கான்வென்டில் தங்கியிருந்த சமயத்தில் 1992ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். இதை விசாரித்த போலீசார், அவர் தற்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

Sister Abhaya Murder case... Kerala Catholic Priest, Nun Get Life Imprisonment

இதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர்களும் தற்கொலை என்றே கூறினர். 2வதாக நியமிக்கப்பட்ட சிபிஐ விசாரணையில் அபயா கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. 3வது குழு விசாரித்தத்தில் இந்த கொலையை செய்தவர்கள் பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி என தெரியவந்தது. இவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Sister Abhaya Murder case... Kerala Catholic Priest, Nun Get Life Imprisonment

இந்நிலையில், கன்னியாஸ்திரி செபியும், பாதிரியார் தாமஸும் நெருக்கமாக இருந்த காட்சியை அபயா பார்த்துவிட்டதால், வெளியே சொல்லிவிடுவாரோ என பயந்து, அபயாவை கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது கொலை வழக்கு, குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பாதிரியார் புத்ருக்காயலுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு அவரை விடுவித்தது. மற்ற இருவர் மீது வழக்கு நடந்து வந்தது.Sister Abhaya Murder case... Kerala Catholic Priest, Nun Get Life Imprisonment

இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.சனல் குமார் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், பாதிரியார் தாமஸ் கூட்டுர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்றும் நாளை தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது, அவர்களுக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பாதிரியார் தாமஸிக்கு ரூ. 6.5 லட்சமும்,  கன்னியாஸ்திரி செபிக்கு  ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி, கொலை நடந்து, 28 ஆண்டுகளுக்கு பின், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios