தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த சர்மிளா என்ற 21 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு தொழில் விசயமாக அடிக்கடி வந்த திருபுவனம் காத்தாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரி சின்னப்பா  என்பவர் வந்து செல்வார்.

அப்போது சின்னப்பா , அந்த பெண் சர்மிளாவிடம் நன்றாக பழகியுள்ளார். ஒவ்வொரு முறை ஜவுளிக்கடைக்கு வரும்போதும் அந்தத் பெண்ணிடம் நீ என் மகள் போன்றவர் என்றே கூறி வந்திருக்கிறார். இதனால் சர்மிளாவுத் அவரை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து பழகி வந்திருக்கிறார்.

இந்நிலையில் சின்னப்பா , சர்மிளாவின் வீட்டுக்குச் சென்று தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி அழைத்துள்ளார். அவர் செல்ல மறுத்தும் நான் உன் தந்தைக்கு சமமானவன். உன் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவன் என்று பேசி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

அவரது வீட்டில் யாரும் இல்லாததால் அச்சடைந்த சர்மிளா உடனடியாக கிளம்ப  வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு சின்னப்பா சரிம்மா குளிர் பானம்  மட்டும் குடித்துவிட்டு கிளம்பலாம் என்று சொல்லி அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார்.

சர்மிளா மயக்கமாக இருந்த நிலையில் சின்னப்பா அவரை கற்பழித்துள்ளார். மயக்கத் தெளிந்ததும் கிட்டத்தட்ட  3 மணிநேரம் கழித்து சர்மிளாவை  அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளார். என்ன நடந்ததோ என பதற்றத்துடன் காணப்பட்ட அந்த பெண், குளியல் அறைக்கு சென்றபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார்..

உடனடியாக  சர்மிளா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவக்கு  9 தையல் போடப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று  சர்மிளாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவருக்கு  ரூ.10 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..இதுகுறித்த புகாரின் பேரில் சின்னப்பா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் டாக்டர்கள் கூறும்போது ஒருவர் மட்டும் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.