திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான படங்களை பார்த்துள்ளார். அத்தோடு அந்த ஆபாச படங்களை ஃபேஸ்புக் மெசேஞ்சரில் 15க்கும் அதிகமானோருக்கு பகிர்ந்துள்ளார்.

 நிலவன், ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை பகிர்ந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்த பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் கைது நடவடிக்கைக்கு பயப்படத்தேவையில்லை என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஆபாச படங்களை பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்தில் ஆபாச படங்களை பகிர்ந்தவர் முதல்முறையாக கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.