உள்ளே நுழைந்த 2 திருடனுங்க. ஒரே பெண் 2 பேரை சமாளித்தது எப்படி? வீட்டு ஓனரம்மா செய்த பயங்கர நிகழ்வு..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவரது மனைவி கஸ்தூரி வயது 28.கஸ்தூரி அந்த பகுதியில் இருக்கக்கூடிய உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். காலை நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்கு சென்று விடுவார்.

பின்னர் மீண்டும் மதிய வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த ஒரு தருணத்தில் மதிய வேளையில் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் உள்ளது. உடனடியாக உள்ளே சென்ற கஸ்தூரி, அங்கு இரண்டு பேர் பீரோவை உடைத்து நகையை எடுத்து கொண்டிருந்த காட்சியை பார்த்து இருக்கிறார். இதனை பார்த்த உடன் அருகே இருந்த உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்து துணிச்சலுடன் அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

உருட்டுக்கட்டை என்பதால் இரண்டு வாலிபர்களாலும் எதையும் செய்ய முடியவில்லை. பயங்கர காயம் ஏற்பட்டு வலியில் அய்யோ அம்மா என கதறி உள்ளனர்

இவர்களின் சத்தத்தை கேட்டு தன் வீட்டின் அருகே இருந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் இரண்டு ஆண்களை துணிச்சலாக விரட்டி விரட்டி அடித்து நகை பணம் கொள்ளை போகாமல் தடுத்தது மட்டுமல்லாமல் உயிருக்கு பயப்படாமல் வீறுகொண்டு எழுந்த சிங்கமாய் செயல்பட்ட விதத்தை பார்த்து அனைவரும் தொடர் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.