இளம்பெண் கொலையில் திருப்புமுனை..! பிடிபட்ட காம கொடூரன்கள்..! வெளிவந்த திக் திக் பின்னணி...!  

போனில் கதறிய 26 வயது இளம்பெண்..! டோல்கேட்டில் நடந்த பயங்கரம்..! சப்வே வில் சடலம்...! திக் திக் நிமிடங்கள்..!

26 வயது இளம்பெண் சாலையோரத்தில் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தில் வசித்து வரும் பிரியங்கா ரெட்டி என்ற இளம்பெண் வெட்னரி மருத்துவம் படிப்பை முடித்து ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தினந்தோறும் ஷம்சாபாத் என்னும் இடத்திலிருந்து கிளம்பி கச்சிபௌலி என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு வழக்கமாக சென்று வீடு திரும்புவது வழக்கம். 

இந்த ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பிய இவர், ஷம்சாபாத் டோல் கேட்டில் வண்டியை நிறுத்திவிட்டு கச்சிபௌலி பகுதிக்கு கார் மூலம் சென்று உள்ளார். பிறகு அன்றைய தினத்தில் இரவு ஏழரை மணி அளவில் கச்சிபௌலியிலிருந்து மீண்டும் டோல் பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது அவருடைய இரு சக்கர வாகனம் பழுதடைந்து உள்ளது. அதாவது பின் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக அங்கே இருந்த லாரி ஓட்டுனர் தெரிவித்து உள்ளார். பின்னர் அவரே சரி செய்து தருவதாகவும் வலுக்கட்டாயமாக உதவி செய்ய முன்வந்துள்ளார்.

மாதுரி எவ்வளவோ எடுத்துரைத்தும் நான் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்தும் கூட விடாமல் உதவி செய்ய முன்வந்துள்ளார். இதன்பேரில் சந்தேகமடைந்த மாதுரி உடனடியாக தான் வைத்திருந்த செல்போன் மூலமாக நிலைமையை தனது சகோதரி ரம்யாவுக்கு தெரிவித்துள்ளார். பின்னர் அழுது புலம்பியுள்ளார். தனக்கு பயமாக உள்ளது விரைந்து வந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர் சகோதரியும் அவரது உறவினர்களும் டோல்கேட் பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது மாதுரியை அங்கு காணவில்லை.

செல்போனில் தொடர்பு கொண்டபோதும் சிக்னல் கிடைக்கவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன சகோதரி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் அன்று மறுதினம் அதிகாலை 3 மணி வரை மாதிரியை தேடி தேடி பார்த்தும் அவரை கண்டுப்பிடிக்க முடியாததால், காவல் நிலையத்தில் புகார் அளித்து  உள்ளனர்

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் காலை 7 மணி அளவில் அதே பகுதியில், சப்வே அருகே பிரியங்கா ரெட்டியை சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்துள்ளனர். 

தற்போது வெளிவந்துள்ள ரிப்போர்ட்டில், "கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் தீ வைத்து எரித்துள்ளனர்" என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியங்கா ரெட்டியை திட்டமிட்டு கொலை செய்து உள்ளனரா..? அல்லது திடீரென இதுபோன்ற காமவெறியில் இப்படி ஒரு கேவலமான செயலை செய்து உள்ளனரா என தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடரும் அதிர்ச்சி.. தெலங்கானாவில் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம்.. வெளியான கதிகலங்க வைக்கும் வீடியோ..!