சமூக வலைத்தளங்களை,  மூலதனமாக வைத்து அடுக்கடுக்காக பல அழகிய புகைப்படங்களை பதிவிட்டு, பெண்களை மயக்கி, ஏமாற்றி  தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறியுள்ளனர்.

பல பெண்களிடம், அன்பாக பேசி அவர்களிடம் நட்பை வளர்த்து கொண்டு, பின் காதல் வலையில் சிக்கவைத்து, அவர்களை ஏமாற்றி அவர்களுடன் தனிமையில் இருக்கும் போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள்  எடுத்து,  சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி மெல்ல மெல்ல பணம் பறித்து வந்த சமூக வலைதள ரோமியோ தான் இந்த நாகர்கோவில் காசி.

பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து, காசி பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடியுள்ள இந்த தகவல் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: துப்பாக்கியை கையில் வைத்து அப்பாவுடன் போலீஸ் விளையாட்டு! இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?
 

காசியின் காதல் வலையில் சிக்கி, தன்னை இழந்தது மட்டும் இன்றி 5 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தையும் இழந்த, பெண்  மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இவரை தொடர்ந்து, இன்ஜினியரிங் பெண் ஒருவரும் இவர் மீது ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தன்னை ஒரு தொழிலதிபராக காட்டிக்கொண்டு, பள்ளி மாணவிகள் முதல், 40 வயதுக்கு  மேற்பட்ட பெண்கள் வரை மயக்கி இவர் அரங்கேற்றியுள்ள லீலைகள், திரைப்படங்களையே  விஞ்சும் அளவிற்கு உள்ளது. 

மேலும் செய்திகள்: அம்மாவின் பட்டு புடவையை வித்தியாசமாக கட்டி போட்டோ ஷூட்! நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு குவியும் லைக்ஸ்!
 

இந்நிலையில்,  இவருடைய லேப்டாப், இரண்டு ஹார்ட் டிஸ்க் உட்பட அனைத்தையும் கைப்பற்றியுள்ள போலீசார், காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களையும் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

பெண்களிடம் இருந்து பறிக்கும் பணத்தில், அடிக்கடி தன்னுடைய வீட்டை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் காசி. மேலும்  4 லட்சத்தில் பைக், 1 லட்சம்  வாட்ச் என புதிய பெண்களை மயக்க பிட்டு போட்டு வைத்துள்ளார்.

கையும் களவுமாக சிக்கிய பின்னரும் பெண்களை அவதூறாக பேசி வீடியோவும் வெளியிட்டார். 

மேலும் செய்திகள்: பிரபல இளம் நடிகர் விபத்தில் சிக்கி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
 

இந்நிலையில் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்கில் கொட்டி கிடைக்கும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து, காசியிடம் விடாப்பிடியாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் போலீசாரின் விசாரணைக்கு இவர் ஒத்துழைக்க மறுத்து அவர்களுக்கே அதிர்ச்சி கொடுத்து வருவதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.