மூன்றே நாளில் இவரிடம் பேசிய அந்த பெண் அம்பிகா தயானந்தை காதல் வலையில் விழவைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம், கலபுராகி எனும் இடத்தில் ஜூன் 24 ஆம் தேதி தயானந் எனும் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியத்தில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் பெயிண்டராக வேலை செய்த தயானந்தா(24) சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். இவருடைய தொலைபேசிக்கு ஒரு பெண்ணின் அழைப்பு தவறுதலாக வந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து மூன்றே நாளில் இவரிடம் பேசிய அந்த பெண் அம்பிகா தயானந்தை காதல் வலையில் விழவைத்துள்ளார். பின்பு இவரை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் அழைத்துள்ளார். உடனே தயானந்தும் இவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அம்பிகாவின் கும்பல் ஒன்று அந்த இடத்திற்கு வந்து தயானந்தை அம்பிகாவுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது.
அம்பிகா இதை வீடியோவாக பதிவு செய்து தன்னுடைய காதலன் அனில் என்பவருக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல் துறை கொலையில் ஈடுபட்ட அம்பிகா மற்றும் அவருடைய கும்பல் ஆறு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை செய்துள்ளனர். அதில் ஏற்கனவே அம்பிகா திருமணமானவர் என்றும் அவருக்கு பெண் குழந்தை ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?

இருப்பினும் இவர் தயானந்தாவின் உறவினர் அனில் என்பவரை முகநூல் மூலம் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலன் அனிலின் மனைவியுடன் தயானந்த் தகாத உறவில் இருந்தது இவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அம்பிகா 3 லட்சம் ரூபாய் பணத்தை அனிலிடம் வாங்கிக் கொண்டு காதல் நாடகம் நடத்தி தயானந்தை கொன்று வீடியோ பதிவு செய்து காதலன் அனிலுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!
