Shiv Nadar University: பல்கலைக்கழகத்தில் பயங்கரம்.. மாணவியை சுட்டுகொன்றுவிட்டு மாணவன் செய்த காரியம்..!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த அனுஜ் என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவியான நேஹா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Shiv Nadar University student committed suicide after shooting the student

ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த அனுஜ் என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவியான நேஹா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசம்! புருஷனை நெருங்கவிடாத மனைவி! ஏக்கத்தில் டார்ச்சர்! இறுதியில் நடந்த பயங்கரம்..!

Shiv Nadar University student committed suicide after shooting the student

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அனுஜ் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து காதலி நேஹா சரமாரியாக சுட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

Shiv Nadar University student committed suicide after shooting the student

இந்நிலையில, நேஹாவை சுட்ட அனுஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிக்குச் சென்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அனுஜுக்கு எப்படித் துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;-  நாகூர் மீரானின் கொலைக்கு பழிக்கு பழி? மகன்கள் கண்முன்னே தந்தை வெட்டி கூறு போட்ட கும்பல்.. சென்னையில் பயங்கரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios