நாகூர் மீரானின் கொலைக்கு பழிக்கு பழி? மகன்கள் கண்முன்னே தந்தை வெட்டி கூறு போட்ட கும்பல்.. சென்னையில் பயங்கரம்

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடியான சீனா என்ற சீனிவாசன்(42). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக தென் சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த நாகூர் மீரானை வெட்டி படுகொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்.

chennai adambakkam rowdy murder... police investigation

சென்னையில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தந்தையை மகன்கள் கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடியான சீனா என்ற சீனிவாசன்(42). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக தென் சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த நாகூர் மீரானை வெட்டி படுகொலை செய்த வழக்கில் தொடர்புடையவர். இந்த வழக்கில் சிறை சென்றுவிட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையும் படிங்க;- ப்ளீஸ் விட்டுடுங்க.. கதறியும் விடாமல் விடாமல் பலாத்காரம்! மாணவியை கர்ப்பமாக்கிய 65 வயது கிழவனுக்கு ஆப்பு.!

chennai adambakkam rowdy murder... police investigation

இந்நிலையில், நேற்று இரவு ரவுடி சீனா தனது இரண்டு மகன்களுடன் அதே பகுதியில் 11-வது தெருவில் நடைபெற்ற தனது மைத்துனர் மாரிமுத்துவின் 16-ம் நாள் காரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், வீட்டு வாசலில் தனது மகன்களுடன் சேரில் சீனா அமர்ந்திருந்திருந்தார். அப்போது, மாஸ்க் அணிந்து கொண்டு பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனாவை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க முயன்ற மகன்களுக்கும் வெட்டு விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக  ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த அவரது இரண்டு மகன்களுக்கும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிங்க;-  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட மனைவி.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

chennai adambakkam rowdy murder... police investigation

இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் நாகூர் மீரானின் கொலைக்கு பழி தீர்க்க சீனிவாசன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மகன்கள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios