மதுரையில் 16 வயது வயதான மாணவனைக் கடத்தில் 4 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. ஆசிரியையான இவர் அருகில் வசிக்கும் பள்ளி சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன் மீது நிர்மலாவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக அந்த மாணவனை அணுகிய நிர்மலா கடந்த சில நாட்களுக்கு முன் விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் சென்ற நிர்மலா, ஒத்தக்கடையில் உள்ள தனி அறையில் வைத்து 4 நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

பின்னர் வீடு திரும்பிய அந்தச் சிறுவன் ஆசிரியை நிர்மலாவின் லீலைகள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட  காவல்துறையினர் ஆசிரியை நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஆரணியை சேர்ந்த ஆசிரியை நித்யா ஐ.டி.ஐ. படிக்கும் 17 வயது மாணவன் மற்றும் பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்த நித்யா பள்ளி மாணவன் ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார்.

மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார். 2 மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியைகள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.