அம்மா அந்த தாத்தா நைசா கூப்பிட்டுபோய் இப்படியெல்லாம் செஞ்சாரு.. 67 கிழவனை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!
சென்னை புழல் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (67). இவர் சோபா பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு அருகே உள்ள காலி மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் விளையாடி வருவது வழக்கம்
சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை புழல் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (67). இவர் சோபா பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு அருகே உள்ள காலி மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் விளையாடி வருவது வழக்கம்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் செய்கிற வேலையா இது.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 4ம் மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் அங்கு விளையாடியபோது, விஜயகுமார் அவர்களிடம் நைசாக பேசி, தனது கடைக்கு அழைத்துச் சென்று கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- பாரினில் இருந்தே பக்கா ஸ்கெட்ச்.. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கொலை.. நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி?
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைத்தனர். பள்ளி சிறுமிகளிடம் முதியவர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.