Asianet News TamilAsianet News Tamil

அடச்சி! கருமம் கருமம்! சொல்லவே நாக்கு கூசுது! மகளுக்கு ஓயாமல் பாலியல் தொல்லை! தந்தை கைது! தாய் உடந்தை.!

பெற்ற மகளுக்கு தந்தை அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. 

Sexual harassment of the daughter! Father arrested!
Author
First Published Jul 30, 2023, 9:44 AM IST

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை மற்றும் உடந்தையாக இருந்த தாயை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்தனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதி. இவர்களுக்கு 14 வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், பெற்ற மகளுக்கு தந்தை அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. 

இதையும் படிங்க;- சிறுமியை சீரழித்த கொடூரம்! அந்தரங்க உறுப்பில் காயம்! வெறி தீராததால் உடல் முழுவதும் கடித்து சித்தரவதை.!

Sexual harassment of the daughter! Father arrested!

இதனையடுத்து, வேறு வழியில்லாமல் மகளை திருநெல்வேலி காப்பாகத்தில் தங்கி படிப்பதற்காக சேர்த்துள்ளார். இந்நிலையில், விடுமுறை தினங்களில் வீட்டுக்கு மாணவி வந்து சென்றபோது, அவரது தந்தை மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க;-  சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்..!

Sexual harassment of the daughter! Father arrested!

இதனால், வேதனை அடைந்த மாணவி காப்பக நிர்வாகியிடம் சிறுமி கதறியபடி கூறியுள்ளார். இதனையடுத்து காப்பாக நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை, உடந்தையாக இருந்த தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios