திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவர்களுடன் தகாத உறவை வைத்துக்கொண்ட ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ்குமார். இவர் அரசு பள்யியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல் அவரது மனைவி நித்யாவும்  ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

பின்னர் ஆசிரியை நித்யா செங்கம் பகுதியில் உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் ஒரு மாணவனுடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உல்லாசமாக இருந்த போது எடுத்த புகைப்படங்களை ரசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. 

இதனையடுத்து அவரது நித்யாவின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் 2 மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனையடுத்து மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கந்தசாமியிடம் புகார் கொடுத்துள்ளார். 

ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆசிரியை நித்யாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியை நித்யாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.