இறந்த உடல் என்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு....! குற்றவாளிக்கு "தூக்குத்தண்டனை"விதித்து அதிரடி தீர்ப்பு...!

மராட்டிய மாநிலம் மும்பை வில்லே பார்லே பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் பிசியோதெரபிஸ்ட்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.தன்னுடைய பெற்றோருடன் வசித்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.  

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு, பெற்றோர்கள் வெளியில் சென்ற நேரம் பார்த்து, வீட்டில் தனியாக இருந்த பெண்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்து உள்ளார் பக்கத்துக்கு வீட்டு நகைக்கடை ஊழியர் தேபாஜிஸ் தாரா. அப்போது, அப்பெண் சப்தம் போடவே, வாயை அடைத்து கட்டிப்போட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அந்தப் பெண் இறந்த பின்னரும் இந்த காமக்கொடூரன் மீண்டும் பெண்ணின் உடலுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக கைது செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதுகுறித்த வழக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி தேபாஜிஸ் தாரா  குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு 4 ஆம் தேதியான நேற்று தேபாஜிஸ் தாராவுக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.