ஆந்திரா மாநிலம் குப்பம் மல்லானூர் அடுத்த சதுமூரை சேர்ந்த சரவணன். இவருடைய மனைவி பிரமிளா. அவர்களின் மகள் அனுராதா, அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் மல்லானூர் இந்திரா நகரை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கணக்கு வாத்தியாராக வேலை பார்த்து வருகிறார்.

பாடம் எடுக்க செல்லும் கோவிந்தசாமி,  அனுராதாவின் அழகில் மயங்கி, தன்னை காதலிக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லி வந்துள்ளார். பள்ளியிலும், வெளியிலும் தொல்லை கொடுத்து கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியை தொட்டு பேசி தொல்லை கொடுத்துள்ளார். லவ் டார்ச்சர் தாங்க முடியாமல் அனுராதா தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோரும், கோவிந்தசாமியை கடுமையாக கண்டித்துள்ளார். அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 முறை கிராம நாட்டாமைகள் முன்னிலையில் பஞ்சாயத்தை பேசி கணக்கு வாத்தி கோவிந்தசாமியை கண்டித்தனர்.

ஆனால் கணக்கு வாத்தியின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து மாணவி அனுராதாவுக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு மது குடித்து விட்டு வந்த கோவிந்தசாமி அனுராதாவின் வீட்டுக்கு சென்று அவரிடமும், பெற்றோரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி அனுராதா பின்னர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் வெகுநேரம் தேடினர். ஆனால் அவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், அங்குள்ள விவசாய நிலத்தில் அனுராதா சுயநினைவின்றி கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற பெற்றோர், அனுராதாவை மீட்டு குப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அனுராதாவின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். கணித ஆசிரியர் கோவிந்தசாமியின் லவ் டார்ச்சரால் தான், எங்களின் மகள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அனுராதாவின் பெற்றோர் குப்பம் டவுன் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ் பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.