12-ம் வகுப்பு மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுனரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தமிழகத்தில் சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். கடந்த வாரம் கோவையில் 6-வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டியை உலுக்கியது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை கிராமம் உள்ளது.

இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவரும் 17 வயது மாணவியை அவரது வீட்டின் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டி(23) என்பவர் ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்வதால், வீட்டில் இல்லாத சூழலில் சிறுமியை கவனிக்க நேரமின்றி இருந்துள்ளனர்.

 

இதையடுத்து ஒருநாள் மாணவியின் தாயார் அவரை எங்கு சென்றிருந்தாய் என கேட்கும்போது, பயந்து போய் மாணவி நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.