சேலம் அருகே 2000 ரூபாய் கடனுக்காக பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை ஆபாச வீடியோ எடுத்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அருகே வேம்படிதாளம் செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ டிரைவர். கடந்த வாரம் வாலிபர் ஒருவரை ஹோமோ செக்ஸ்சுக்கு அழைத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மோகன்ராஜை கைது  செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி, மோகன்ராஜ் பலாத்காரம் செய்யும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

இப்பெண் உள்பட 7 பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்திருப்பதாக எஸ்பியிடம் புகார்  கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலிசார் விசாரணை மேற்கொண்டனர். வீடியோவில் உள்ள பெண் பற்றி விசாரித்தனர். அவர் வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவானார். யாரும் புகார் கொடுக்காததால் பலாத்கார வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் தவித்து வந்தனர். இந்நிலையில், வீடியோவில் இருப்பது எனது கணவர் இல்லை எனவும், மார்பிங் செய்யப்பட்டது எனவும் இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி, தவறான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்டோ  டிரைவர் மோகன்ராஜின் மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று மனு கொடுத்தார்.

 

இந்நிலையில் ஆபாச வீடியோ வெளியானதால் தலைமறைவாக இருந்த சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை நேற்று முன்தினம் கொண்டலாம்பட்டி போலீசார் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவரிடம் புகார்  பெற்றனர். அப்பெண் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் ஹாலோ பிரிக்ஸ் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தேன். திடீரென அந்த வேலையும் இல்லாமல் போனது. பணம் இல்லாமல் இருந்த நேரத்தில், ஆட்டோ  டிரைவர் மோகன்ராஜிடம் 2 ஆயிரம் கடன் வாங்கினேன். அதை திருப்பி கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

ஆனால் மோகன்ராஜ் பணம் கேட்டு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வந்தார். ஒரு நாள் என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அப்போது  என்னிடம் இப்போது பணம் இல்லை என்றேன். ஆனால் பணம் தரவேண்டாம், வீட்டிற்கு வந்துவிட்டு போ’ என்றார். அதனை நம்பி வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னை கொன்று விடுவதாக மிரட்டி கட்டாயப்படுத்தி என்னை பலாத்காரம் செய்து விட்டார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்து என்னை தொடர்ந்து மிரட்டினார். அழைக்கும் போது வரவில்லை என்றால் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என கூறினார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேற்கண்டவாறு புகார் மனுவில் கூறியுள்ளார். 

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.  பின்னர் அப்பெண்ணுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் சிறையில் இருக்கும் மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.