சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அலறிய பயணிகள்.. அரிவாளால் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு?

நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்டு சென்றது. பின்னர் ரயிலில் வந்து இறங்கிய பயணிகள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். 

Saidapet railway station woman cut with sickle death?

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நோக்கி தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆகையால், இந்த ரயில்கள் நின்று செல்லும் வழிதடங்கல் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்டு சென்றது. பின்னர் ரயிலில் வந்து இறங்கிய பயணிகள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க;- கூல்ட்ரிங்க்ஸில் வோட்காவை கலந்து கொடுத்து காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்..!

Saidapet railway station woman cut with sickle death?

அப்போது அதே ரயிலில் வந்த ராஜேஸ்வரி என்ற பெண் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி விட்டு மீண்டும் அதே ரயிலில் தப்பியுள்ளார். இச்சம்பவத்தால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதையும் படிங்க;-  கட்டிலில் வாலிபருடன் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன்.. ஓராண்டுக்கு பின் சிக்கிய சித்தி.. நடந்தது என்ன?

'Saidapet railway station woman cut with sickle death?

ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜேஸ்வரியை ரயில்வே போலீசார் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரயில் நிலையத்தில் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios