ஷாக்கிங் நியூஸ்.. ஜாமீனில் வெளியே வந்த ரவுடி.. சினிமா பாணியில் ஓட ஓட விரட்டி படுகொலை..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் ரெட் தினேஷ் (27). இவர் கஞ்சா மற்றும் சாராய வியாபாரியான இவர் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெட் தினேஷ் சமீபத்தில் தான் ஜாமீனில் இருந்து வெளியே வந்துள்ளார்.
சீர்காழி அருகே ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட, ஓட அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் ரெட் தினேஷ் (27). இவர் கஞ்சா மற்றும் சாராய வியாபாரியான இவர் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெட் தினேஷ் சமீபத்தில் தான் ஜாமீனில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கும் வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. கணவரை கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!
இந்நிலையில், தினேஷ் நேற்று இரவு கோவில்பத்து பள்ளிக்கூடம் அருகே நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தினேஷ் உயிர் பயத்தில் ஓட தொடங்கினார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க;- என் கூட கொஞ்சம் நேரம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்! ஓஹோன்னு வாழலாம்.. நைட்டி டியூட்டி வந்தவரிடம் டாக்டர் சில்மிஷம்.!