சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற மொக்கா மோகன்(23).  இவர் மீது வழிப்பறி அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். ரவுடி போல கூட்டாளிகளுடன் சுற்றி வந்த மோகனுக்கும் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புறா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சென்னை புதுப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற மொக்கா மோகன்(23). இவர் மீது வழிப்பறி அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். ரவுடி போல கூட்டாளிகளுடன் சுற்றி வந்த மோகனுக்கும் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புறா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று தன்னுடைய நண்பன் அருணாச்சலத்தின் மனைவி பிறந்த நாள் பார்டியில் பங்கேற்பதற்காக மோகன் தனது நண்பர்களுடன் கேக் வாங்கி கொண்டு நள்ளிரவு புதுப்பேட்டைக்கு சென்றுள்ளனர். 

மோகன் போலீசுக்கு சொன்ன தகவலால், புதுப்பேட்டை ரவுடி புறா செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதுப்பேட்டைக்கு மோகன் வந்து சென்றது புறாவின் கூட்டாளிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மோகணை சுற்றி வளைக்க தேடி உள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட மோகன் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தனது நண்பர்கள் 6 பேரை அழைத்து வந்து கத்தியை எடுத்துக் கொண்டு வாண்டடாக மீண்டும் புதுப்பேட்டை பகுதிக்கு கெத்து காட்ட சென்றுள்ளார்.

 பின்னர், நள்ளிரவில் புதுப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் அருகே உள்ள சாலைக்கு பைக்கில் சென்று, அங்கு நின்று இருந்த வாலிபர்களிடம் எங்களை யார் விசாரித்துவிட்டு சென்றது என்று கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அங்கிருந்த 4 பேர் திடீரென மோகனை சுத்துபோட்டு அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து உயிர் பயத்தில் தப்பி ஓடியுள்ளார். ஆனால் 4 பேரும், மோகனை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று, புதுப்பேட்டை அய்யாசாமி தெருவில் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

துகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரவுடி மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில் புதுப்பேட்டை அய்யாசாமி தெருவை சேர்ந்த ரவுடிகளான விக்ரம் (20), யூடியூப் (எ) வெங்கடேசன் (20), விக்னேஷ் (21), வசீகரன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், புதுப்பேட்டை பகுதியில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட போட்டியில் மோகனை கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து, 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து இரு கத்திகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க;- யாரு வீட்டு பொண்ண யாரு கல்யாணம் பண்றது.. தகுதி தராதரம் வேணா.. இளைஞரின் தாயை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை