சென்னையில் பட்டப்பகலில் மளிகை கடை ஒன்றில் பட்டா கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர் ஒருவர் ஊழியர்களிடம் 1000 ரூபாய் மாமூல் வாங்கி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

சென்னை செம்மஞ்சேரியில் மளிகை கடைக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர். அப்போது திடீரென பட்டா கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளார். பின்னர் அந்த நபர் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தாமல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துவிட்டு, 1000 ரூபாய் காசை கொடுக்காவிட்டால் வெட்டுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் கல்லாப்பேட்டியில் இருந்து 1000 ரூபாயை எடுத்து கொடுத்த பின்பு அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிடுகிறார். அவர் கஞ்சா போதையில் இருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக உடனே செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செம்மஞ்சேரியில் கஞ்சா போதையில் அடிக்கடி இதுபோன்ற அட்டகாசங்கள் நிகழ்வதால், கஞ்சா விற்பனையைத் தடுப்பதுடன், ரவுடி என்று கூறி சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.