கர்நாடக மாநிலம் மைசூரில் ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரியான ஆர்.எஸ். குல்கர்னி(82). இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மைசூர் பல்கலைக்கழகத்தின் மானச கங்கோத்ரி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். 

மைசூரில் 82 வயதான உளவுத்துறை முன்னாள் அதிகாரி ஆர்.என்.குல்கர்னி மாலையில் வாக்கிங் சென்றுக்கொண்டிருந்த போது நெம்பர் பிளேட் இல்லாத கார் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநிலம் மைசூரில் ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரியான ஆர்.எஸ். குல்கர்னி(82). இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மைசூர் பல்கலைக்கழகத்தின் மானச கங்கோத்ரி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிரே அதிவேகத்தில் வந்த கார் குல்கர்னி மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- Viral Video: அயர்ன் பாக்சில் மாணவர்களுக்குள் விடுதியில் நடந்த சண்டை.! போர்க்களமான விடுதி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த வீடியோவில் அதிவேகதத்தில் நெம்பர் பிளேட் இல்லாமல் வந்த கார் குல்கர்னி மீது மோதிவிட்டு சென்றது பதிவாகி இருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றது. 

இதையும் படிங்க;- Cobra bites boy: 8 வயது சிறுவன் கடித்து விஷப் பாம்பு பலி! சத்தீஸ்கரில் வினோதம்!