ஆந்திராவில் கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த சண்டை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர், விடுதி அறைக்குள் மற்றொரு மாணவனை இரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானது. இதனை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோவில், பாதிக்கப்பட்ட மாணவர் கெஞ்சுக்கொண்டு, மன்னிப்பு கேட்டார். ஆனால், அந்த மாணவர்கள் தொடர்ந்து அவரைத் தாக்குகின்றனர். அந்த மாணவனின் சட்டையை கழட்ட சொல்லி அடித்த அவர்கள், அந்த மாணவரின் சட்டையை கிழிக்கிறார்கள்.

இதையும் படிங்க..யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!
இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எஸ்.ஆர்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வருகின்றனர் என்றும், இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர் அங்கித், உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது மார்பு மற்றும் கைகளில் முத்திரை குத்தப்பட்ட காயங்களும் உள்ளன. இதுகுறித்து போலீசார் கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க..தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!
இதையும் படிங்க..Viral Video: எங்க வீட்டுக்கு போகணும், நான் வரமாட்டேன்.! திருமணத்திற்கு பிறகு கணவருடன் செல்ல மறுத்த பெண் !!
