பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு  கோவை தலைமை குற்றவியல் நடுவர் மன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசர், சதீஷ் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக அறியப்படும் திருநாவுக்கரசின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில், இது தொடர்பாக சிறையில் உள்ள 4 குற்றவாளிகளையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோவை குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். 

அந்த மனுமீதான விசாரணையின் போது குற்றவாளிகளிடம் காணொலி மூலம் விசாரணை நடத்துவது ஏன்? என வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அதற்கு தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தெரிவித்த நீதிபதி திருநாவுக்கரசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தனர். திருநாவுக்கரசிடம் சிபிசிஐரி போலீஸார் நடத்தும் விசாரணையில் பல்வேறு ரகசியங்கள் வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.