தன்னை விட்டுப் போகாவிட்டால் ஆபாசப்படத்தை வெளியிட்டு விடுவதாக தனது மனைவியை மிரட்டிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி மகாலட்சுமி மதுரையை சேர்ந்த இளைஞர் தன்னிடம் முகநூலில் பழகி அதனை தொடர்ந்து திருமணம் செய்து விட்டு கொடுமைபடுத்தி தற்போது விரட்டி விட்டார் எனவும், போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்ததாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். பொள்ளாச்சியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணான மகாலட்சுமி பொள்ளாட்சியில் உள்ள கல்லூரியில் இளநிலை அறிவியல் பயின்றுள்ளார். மாணவிக்கு 2017ம் ஆண்டு முகநூல் மூலமாக அறிமுகமாகியவர் மதுரை மேலூர் கொட்டாம்பட்டியை சார்ந்த இளைஞர் அஜித்குமார்.
 
இருவரது பழக்கம் காதலாக மாறியுள்ளது. பலமுறை தனிமையிலும் சந்தித்துள்ளனர். இதனை பயன்படுத்தி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை படம் பிடித்து அஜித்குமார் மிரட்டியுள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவியும் மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அஜித்குமார் கொட்டாம்பட்டி அழைத்து வந்து உறவினர்கள் முன்னிலையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணமான பின்பு மாணவிக்கு பல்வேறு பிரச்சனைகளையும் மற்றும் வரதட்சணை கொடுமையையும் செய்துள்ளார் அஜித்குமார் 
கடந்த இரண்டு மாதாமாக வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக மது கொடுத்து குடிக்கச்சொல்லியும், பல நேரங்களில் தன்னை மயக்கமாக்கி என்ன நடந்தது என்றே தெரியாத வண்ணம் அஜித்குமார் செய்ததாக புகார் தெரிவிக்கிறார்.

மேலும் தற்போது தன்னை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டதாகவும், தன்னிடம் இருந்த நகைகளையும் வாங்கியதோடு, அரசியல் கட்சி நண்பர்களை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்தார். கணவரின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து தன்னையும் தன் கணவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டுமென காவல்துறையிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு கொடுத்து இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். 

ஏற்கனவே பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று பொள்ளாச்சியை சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.