பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் சிபிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விசாரணையில் பல திடுக் தகவல்களை வெளியிட்டுவரும் திருநாவுக்கரசு,  பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான பெண்களுடன் உல்லாசம் இருந்துள்ளதையும்  தாண்டி சென்னையிலும் தங்களது கைவரிசையை காட்டியிருக்கின்றனர்.

திருநாவுக்கரசின் வாக்குமூலத்தில்; உல்லாச வாழ்க்கையை அதிகமாக்கிக்கொள்ள, பெண்கள் பெயரில்   போலியான ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி அதில் பலரை எங்கள் வலையில் வீழ்த்தினோம். எங்கள் வலையில் தானாக வந்து சிக்கிக் கொண்டவர் தான் சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர். அவரை பொள்ளாச்சிக்கே வரவழைத்து நாங்கள் நான்கு பேரும் உல்லாசமாக இருந்தோம், அதை வீடியோ எடுத்து தொடர்ந்து பணம் பறித்தோம். இதுவரை அந்த பெண் டாக்டரிடம்  சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை மிரட்டி வாங்கினோம்.

 ஒருகட்டத்தில்  அவர் போலீசில் எழுத்து மூலமாக கொடுக்காமால் வாய் புகார் அளித்தார், போலீசார் எங்களை மிரட்டி பணம் மட்டுமே வாங்கி கொண்டு எங்களை விட்டுவிட்டனர். அப்போது பார் நாகராஜ்தான் இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து  பண்ணி முடித்து வைத்தார் எனக் கூறினார்.