சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருநாவுக்கரசு சென்னையை சேர்ந்த பிரபல டாக்டரை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்தது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள அந்த பிரபல பெண் டாக்டர் ஒருவரிடம், தன்னை ஒரு பெண் என்று முகநூல் மூலம் திருநாவுக்கரசு அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த டாக்டரிடம் செக்ஸ் கேள்விகள்,  பெண்களுக்கான நோய் குறித்து சந்தேகம் கேட்பதுபோல மெசேஜ் தட்ட தொடங்கினார்.

ஒருகட்டத்தில் நிறைய செக்ஸ் சம்பந்தமான கேள்விகளையே சந்தேகமாக கேட்க ஆரம்பித்திருக்கிறான் திருநாவுக்கரசு. அந்த பெண் டாக்டரும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்திருக்கிறார்.

பின்னர் மிகவும் அவர்கள் குளோஸ் ஆக பழகத் தொடங்கியதும் நாம் இருவரும் லெஸ்பியனாக இருக்கலாமா? என்று கேட்டுள்ளான். இதைத் தொடர்ந்து  இருவரும் மனம் விட்டு பேசுவதுபோல நிறைய மெசேஜ்களை அனுப்பிக்கொண்டனர். 

ஆண் என்று தெரியாத அந்த பெண் டாக்டரும் சில ஆபாச தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆபாச தகவல்கள் ஒரு கட்டத்தில் தனது வேலையை காட்ட ஆரம்பித்தான் திருநாவுக்கரசு. 

இதுவரை ஃபேஸ்புக்கில் டாக்டர் அனுப்பிய மெசேஜ்களை ஒட்டுமொத்தமாக அந்த டாக்டருக்கே திருப்பி அனுப்பி, தன்னைப்  பற்றி  முழுமையாக சொல்லி மிரட்ட தொடங்கியிருக்கிறார்.

தொடர்ந்து மிரட்ட தொடங்கிய பொள்ளாச்சி பண்ணை வீட்டுக்கு வரலைன்னா, இந்த மேசேஜ் எல்லாத்தையும் உன் புருஷனிடம் காட்டுவேன், உன்னை அசிங்கப்படுத்துவேன்.. டாக்டரா நீ வேலை பார்க்கவே முடியாது" என்று மிரட்டல் வார்த்தைகளை அள்ளி வீசி.. அந்த டாக்டரும் புருஷனுக்கு பயந்து பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த டாக்டரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட திருநாவுக்கரசு, அதை வீடியோவாகவும் எடுத்து டாக்டரிடம் பணம் பறிக்கத் தொடங்கினார். இதையடுத்து திருநாவுக்கரசு பிடிபட்டுள்ளார்.