பொள்ளாச்சி கும்பலிடம் சிக்கி சீரழிந்த பெண்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களைத்தான் இந்த கும்பல் குறி வைத்துள்ளது. அதிலும் நல்ல வசதியான பார்க்க செழிப்பான பெண்களை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு காதல் வளர்ப்பது தான் திருநாவுக்கரசின் மிக முக்கியமான வேலையே. காதல் வலையில் வீழ்ந்த பெண்கள் திக்குமுக்காடும் வகையில் செலவு செய்து அவர்களின் நம்பிக்கையை முழுவதுமாக பெறுவது திருநாவுக்கரசுக்கு கை வந்த கலையாம். 

இப்படி வலையில் வீழும் பெண்களை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று முதலில் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்து மிரட்டுது வதான் இந்த கும்பலின் வேலை. அப்படி எளிதாக வலையில் வீழ்ந்து படுக்கைக்கு வரும் பெண்கள் என்றால் இவர்களுக்கு பிரச்சனை இல்லை. வீடியோவை காட்டி மிரட்டி தேவையான போது தேவையான நபர்களிடம் அனுப்பி வைத்து பணம் வசூலித்து வந்துள்ளனர். 

ஆனால் பண்ணை வீட்டுக்கு வந்த பிறகு படுக்கைக்கு வர மறுக்கும் பெண்களுக்கு தான் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளனர். தன்னால் முடியாத சமயத்தில் காதல் வலையில் விழ வைத்த நபர் விலகிக் கொள்ள மற்றவர்கள் வந்த அந்த பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்து நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்பி வைக்கின்றனர். அதன் பிறகு அவ்வப்போது அதனை காடடி அந்த பெண்களை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். 

தாங்கள் மட்டும் இல்லாமல் பார் நாகராஜன் மூலமாக பல்வேறு தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என பலருக்கு அப்பாவி பெண்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலிடம் சிக்கிய பெண்கள் சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்போதெல்லாம் வழக்கை காதல் தோல்வியில் தற்கொலை என்று போலீசார் முடித்துள்ளனர். இப்படி இந்த கும்பலிடம் சிக்கி உயிரை மாய்த்துக் கொண்ட பெண்களின் கணக்கு தற்போது எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. எனவே விரைவில் இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் பலர் சிக்குவார்கள் என்று கூறுகிறார்கள்.