பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உலுக்கியுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றியதும் விசாரணை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உலுக்கியுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றியதும் விசாரணை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசாரே கண்சிவக்க வைக்கும் அளவிற்கு திருநாவுக்கரசு குடும்பப்பின்னணி இருக்கிறதாம்; கனகராஜின் உறவினர்கள் பொள்ளாச்சியில் வெவ்வேறு கிராமங்களில் வசித்து வருகின்றனர்.  அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சின்னப்பம்பாளையத்தில் குடியேறினர். அவரது உறவினர்கள் யாரும் பக்கத்தில் இல்லை. இவரது முதல்மனைவி, இவரது சொந்தக்கார பெண் தான், முதல் மனைவியுடனான மனஸ்தாபத்தால் விவாகரத்து ஆன நேரத்தில் ஃபைனான்ஸ் தொழிலைக் கவனித்துக்கொண்டு இருந்துள்ளார் கந்துவட்டி கனகராஜ். அந்த நேரத்தில் தான் லதா அவருக்கு அறிமுகம் ஆனதாகக் கூறப்படுகிறது.

அப்போது, சின்னப்பம்பாளையம் ஊரில் உள்ள ஒரு தோட்டத்தில்   குடிசை கட்டி வசித்துள்ளனர் லதா குடும்பத்தினர்.  அப்போது லதா மீது ஏற்பட்ட காதலால், கனகராஜ் – லதா காதல் திருமணம் நடந்துள்ளது. சில வருடங்களில் லதாவின் பெற்றோர் மரணமடைந்த பிறகு, சின்னப்பம்பாளையத்தில் அவருக்கென்று உறவுகள் எவரும் இல்லை. அவரது அண்ணனும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலையானதாகக் சொல்லப்படுகிறது.  

லதா வந்த நேரம், பணம் கொட்டோ கொட்டுனு கொட்டியதால்   கனகராஜ் தனது ஸ்டைலை மாற்றியிருக்கிற்றார். அதாவது சின்னப்பம்பாளையத்தை விட்டு விலகி அந்த ஏரியா கெத்து மனுஷனாக மாறியிருக்கிறார். வீட்டுக்குப் பல ஊர்களிலிருந்தும் கடன் கேட்டு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. அவருக்கு அரசியதிகள் சிநேகம் கிடைத்துள்ளது. cஅந்த நேரத்தில் அவருக்கு சரக்கு அடிக்கும்  பழக்கம் அதிகமாகியிருக்கிறது.

கனகராஜின் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வசித்த ஒருவர் மரமடைந்ததால்  அங்கு இறுதிச் சடங்குகள் நடந்துள்ளது, அப்போது அந்த வீட்டின் முன்பு கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது, அப்போது சரக்கு போதையில்  தனது மாருதி  காரில் வந்துள்ளார் கனகராஜ்.  அங்கிருந்த சிலர் மீது அவரது கார் மோதியதால் அங்கு பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அவர்கள் பலமாக தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசு  தந்தையின் கந்துவட்டி  தொழிலையும் கவனித்து வந்துள்ளார். அப்போது தனது அப்பா கனகராஜ் பலமாக தாக்கப்பட்டது தெரிந்த அவர் உடனடியாகப் பொள்ளாச்சியிலிருந்து  ரவுடிகளை  அழைத்து வந்து  தந்தையைத் தாக்கிய நபர்களை அவர் அடையாளம் காட்ட, அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல்  நடத்தியதால் கலவரம் வெடித்துள்ளது.

இதனால் கொந்தளித்த சின்னப்பம்பாளையம் மக்கள், பறையங்காடு என்ற இடத்தில் உள்ள தோட்டத்து வீடொன்றில் ஊர் மக்கள் கூடிப் பேசியிருக்கின்றனர். இந்தப் பிரச்சினையில் பஞ்சாயத்து பேசலாம் என்று சிலர் முயற்சி செய்ய, திருநாவுக்கரசையும் கனகராஜையும் அடிக்க பிளான் போட்டுள்ளனர்.  இந்த விஷயம் கனகராஜுக்கு தெரிய வர  அன்றிரவே கனகராஜ் தனது குடும்பத்தை சின்னப்பம்பாளையம் வீட்டை விட்டு வெளியேறினார். நேராக மாக்கினாம்பட்டி வீட்டிற்கு வந்துள்ளார். 

பொள்ளாச்சி காந்தி நகர் ஊராட்சி தான் மாக்கினாம்பட்டி. ஏற்கனவே வீட்டின் சொந்தக்காரர், தான் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் கனகராஜிடம் அதைக் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.  திருநாவுக்கரசு குடும்பத்தினர் அங்கு எப்படிப்பட்ட வாழ்வை மேற்கொள்கின்றனர் என்பதும் அந்த வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.