குண்டு வைப்போம் என மிரட்டிய பாஜக நிர்வாகி கர்னல் பாண்டியன்.! வழக்கு பதிவு- கைது செய்ய களத்தில் இறங்கும் போலீஸ்

குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள் நாங்கள், இதனை செய்ய வைத்து விடாதீர்கள் என பாஜக ஆர்பாட்டத்தில் தமிழக அரசை எச்சரித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக நிர்வாகி கர்னல் பாண்டியன் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Police have registered a case against BJP executive Colonel Pandian for threatening the Tamil Nadu government

ராணுவ வீரர் கொலை- பாஜக போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  பகுதியில், குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததில் ஏற்பட்ட மோதல் காரணமாக ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் சின்னச்சாமி கைது செய்யப்பட்டார். ராணுவ வீரர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பாக உண்ணாவிரத போரட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும்,பாஜக முன்னாள் ராணுவ பிரிவை சேர்ந்த கர்னல் பாண்டியன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். கர்னல் பாண்டியன் பேசுகையில், ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல,

குண்டு போடுவோம் என தமிழக அரசை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்.! இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக-செல்வப்பெருந்தகை

Police have registered a case against BJP executive Colonel Pandian for threatening the Tamil Nadu government

குண்டு வைப்போம்- சர்ச்சை பேச்சு

நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள், அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள் என தமிழக அரசு எச்சரிக்கை செய்வதாக கூறினார்.

 

தேசிய பாதுகாப்பு சட்டம்

இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியில் கட்சி தலைவர்கள் முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.மேலும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Police have registered a case against BJP executive Colonel Pandian for threatening the Tamil Nadu government

வழக்கு பதிவு செய்த போலீஸ்

இதனையடுத்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் பாஜகவின் போராட்டக் களத்தில் தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்னல் பாண்டியன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் வன்முறையைத் தூண்டுவது என்பதன் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே கர்னல் பாண்டியனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்..! அதிரடியாக களத்தில் இறங்கிய திமுக அரசு

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios