கேரள மாநிலம் கொல்லம் அருகே இருக்கும் தட்டாரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ்(38). காவலரான இவர் காசனூரில் இருக்கும் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் காசனூரைச் சேர்ந்த சுப்ரியா (34) என்கிற பெண்ணுடன் போசுக்கு பழக்கம் ஏற்பட்டது.அப்பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

நெருங்கி பழகிய இருவரும் நாளடைவில் கள்ளக்காதலர்கள் ஆயினர். பல்வேறு வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக அனுபவித்து வந்தனர். இரு குடும்பத்திற்கும் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவரவே இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளனர். எனினும் கள்ளக்காதலை இருவரும் தொடர்ந்தனர். வீட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த 6ம் தேதி போசும் சுப்ரியாவும் வீட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரி வந்துள்ளனர். அங்கிருக்கும் ஒரு விடுதியில் கணவன் மனைவி என கூறி இருவரும் அறை எடுத்து தங்கினர்.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!

இன்று காலையில் அந்த அறையில் இருந்த அலறல் சத்தம் கேட்கவே விடுதி பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அறையில் சுப்ரியா விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருடன் இருந்த போசை தேடிய போது அருகே இருந்த கடற்கரையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்து வந்த காவல்துறை அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.  மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுப்ரியாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் விஷம் குடித்ததாகவும் அதிக வாந்தி எடுத்ததால் போஸ் மட்டும் வெளியே சென்றதாகவும் கூறினார்.

இதனிடையே காசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

பாஜக சொல்றத கேட்குறதுக்கு நாங்க குழந்தைங்க இல்ல..! திமிறி எழுந்த ஜெயக்குமார்..!