ஏன்னை காதலிக்க போறிங்களா இல்லையா? என தன் காதலை ஏற்க மறுத்த டீச்சரை இளைஞர் ஒருவரை, நடுரோட்டிலேயே இழுத்து போட்டு சரமாரியாக வெச்சு வெளுத்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ரேகா ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக இருக்கிறார். இவருக்கு வயசு 24 ஆகிறது. இவரை அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற 29 வயது நபர் ஒருதலையாக காதலித்துள்ளார்.

இது ஒன் சைட் லவ்தான் ஆனாலும்.. தினமும் டீச்சரை தொடர்ந்து அவர் பள்ளிக்கு செல்லும்போது பார்க்க செல்வது, மாலையில் அதேபோல பின் தொடர்வதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் டீச்சரிடம் தன் காதலை சொல்லினார் வெங்கட்ராமன். ஆனால் டீச்சர் அவரது லவ்வை  ஏற்கவில்லை. இதனால் தினமும் ஸ்கூலுக்கு போகும் போதும், வரும் போதும், லவ்வை ஏற்று கொள்ளும்படி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். அப்படித்தான் சம்பவத்தன்றும் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு போவதற்காக பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் டீச்சர் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு வந்த வெங்கட்ராமன், ஏய் என் லவ்வுக்கு பதில் என்ன சொல்லப்போற?.. என்னோட லவ்வ ஏத்துக்க போறியா? இல்லையா..? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போதும் டீச்சர் மறுக்கவும், வெங்கட்ராமனுக்கு பயங்கர ஆத்திரம் வந்ததால் நடுரோட்டிலேயே அவரை முடியை பிதித்து இழுத்துப் போட்டு சரமாரியாக அடித்து வெளுத்துள்ளார். வலி பொறுக்க முடியாத அந்த டீச்சர் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டே  ஓடினார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தந்தனர். 

விரைந்து வந்த போலீசார் வெங்கட்ராமனை அலேக்காக தூக்கி சென்றனர்.  தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழலில் அடைத்தனர்.