சென்னை டி.பி சத்திரத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆட்டோ ஓட்டி தொழில் பார்த்து வரும் சத்யா அந்த பகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் 102 வது வட்டச் செயலாளராக இருக்கிறார். அந்த பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழகி வந்த சத்யா, ஆசைவார்த்தைகள் கூறி அவரை காதல் வலையிலும் வீழ்த்தியுள்ளார்.

திருமணமாகி இருகுழந்தைகளுக்கு தந்தையான பின்பும், மாணவி ஒருவரை காதலித்து அவரோடு வெளியிடங்களில் சுற்றித்திரிந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 27ம் தேதி மாணவியை தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்ற சத்யா, ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது மாணவியின் தாய்க்கு தெரியவரவே அதிர்ச்சி அடைந்த அவர், சத்யா மீது காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சத்யாவை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். அதில் அவர் பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டதில் உறுதியானதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவி விருப்பப்பட்டு அவருடன் சென்றிருந்தாலும், மைனர் என்பதால் சத்யா மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அதிலும் பிரபலமான அரசியல் கட்சியின் வட்ட செயலாளர் ஒருவரே போக்சோவில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Also Read: 'வாடகை கட்டிடமா.. ஆகச்சிறந்த அந்தர்பல்டியால இருக்கு'..! ஸ்டாலினை விடாது வெறுப்பேற்றும் ராமதாஸ்..!