சென்னையில் பல்வேறு வங்கி ஏடிஎம்-லிருந்து லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பல்வேறு வங்கி ஏடிஎம்-லிருந்து லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் டாக்டர் அழகப்பா சாலையிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து தினமும் ஒரு நபர் 2 முதல் 5 லட்சம் வரை பணம் டெபாசிட் செய்வதாக மும்பையிலுள்ள எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரே நபர் தான் தினமும் சரியாக 6 மணிக்கு ஏடிஎம்மில் பணம் செலுத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து 5.50 மணிக்கு சம்பவயிடத்திற்கு சென்ற போலீஸார், சரியாக 6 மணிக்கு அங்கு வந்த அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வயதான மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - என்ன தெரியுமா?
விசாரணையில் அந்த நபர் புளியந்தோப்பு பகுதியை சாயின்ஷா என்பதும் அவர் Rapido வாகனம் ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவரது பையை சோதனை செய்த போது அதில் 6 லட்ச ரூபாய் பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், பாரிமுனையை சேர்ந்த பர்வீஸ் என்பவர் தினமும் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, அவர் சொல்லும் வங்கி எண்ணுக்கு பணத்தை அனுப்ப சொல்லியதாகவும் அப்படி அனுப்பினால் ஒரு லட்ச ரூபாய்க்கு 1000 ரூபாய் கமிஷன் கிடைக்கும் எனவும் சாயின்ஷா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செல்வியின் முதல் கணவர் குழந்தையா ஸ்ரீமதி.! விஷமம் பரப்பும் யூடியூப்.. டிஜிபி அலுவலகத்தில் கதறிய மாணவியின் தாய்
மேலும் பர்வீஸ் கொடுக்கும் பணத்தை பிரித்து கீழ்ப்பாக்கம், பெரியமேடு, செனாய் நகர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பிரித்து அனுப்பி வந்துள்ளதாகவும், கடந்த ஓராண்டாக இதேபோல் பணத்தை அனுப்பி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸார், அமலாக்கத் துறையினருக்கு தகவல் தெரிவித்து சாயின்ஷாவை அவர்களிடம் ஒப்படைத்தனர். அமலாக்க துறையினர் சாயின்ஷாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாரிமுனையை சேர்ந்த பர்வீஸ் என்பவரை கீழ்ப்பாக்கம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
