Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவிகளை தனியாக அழைத்து சில்மிஷம் செய்த ஆசிரியர்; பள்ளி முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

parents protest against science teacher who sexually abuse girl students at government school in vellore district
Author
First Published Aug 24, 2023, 9:41 AM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று  வருகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இருபால ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ராமன் என்பவர் சுமார் 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிகளிடம் அவ்வப்போ து தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பல மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு பயந்து பெற்றோர்களிடம் அறிவியல் ஆசிரியர் ராமன் பாலியல் தொந்தரவு தருவதாக பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியரிடம் அறிவியல் ஆசிரியர் ராமன் மீது புகார் அளித்தனர். இதனால் அறிவியல் ஆசிரியர் விடுப்பில் சென்று விட்டார். 

மதக்கலவரத்தை தூண்டுவதற்காகவே அண்ணாமலை நடைபயணம்; அமைச்சர் பொன்முடி தடாலடி

பின்னர் இதனை அறிந்த  பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல்துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமி மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்து செல்லும்போது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் வாகனத்தை முற்றுகையிட்டனர். 

இஸ்ரோவின் சந்திரயான் திட்டம்: 3 நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய தமிழர்கள்!

பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமி உயர் அதிகாரிகளிடம் பேசி இன்று சட்டப்படி அறிவியல் ஆசிரியர் ராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர். இது சம்பந்தமாக குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட நடவடிக்கையாக அறிவியல் ஆசிரியர் ராமனை வேலூர் மாவட்டம் பொன்னை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்த மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள். மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த அறிவியல் ஆசிரியர் ராமனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்து சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios