Asianet News TamilAsianet News Tamil

நரபலி பீதி.. வேண்டாம் சாமி இந்த ஊரு.. கேரளாவை தலைமுழுகிவிட்டு குடும்பம் குடும்பமாக ஊர் திரும்பும் தமிழர்கள்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த  ஒரு பெண் உட்பட 2  பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து கேரளாவின் பிழைப்புக்காக வசித்துவந்த தமிழர்கள், குடும்பம் குடும்பமாக சொந்த ஊர் திரும்பி விடுகின்றனர். 

Panic of human sacrifice.. Don't want this town.. Tamils who leave Kerala and return to their hometown.
Author
First Published Oct 14, 2022, 4:04 PM IST

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த  ஒரு பெண் உட்பட 2  பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து கேரளாவின் பிழைப்புக்காக வசித்துவந்த தமிழர்கள், குடும்பம் குடும்பமாக சொந்த ஊர் திரும்பி விடுகின்றனர். இந்த செய்தியை ஆதாரத்துடன் IANS செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு தமிழ் பெண்ணை ஈவு இரக்கம் இல்லாமல் வெட்டிக்கொலை செய்த இந்த மாநிலத்தில் நாங்கள் இருக்கமாட்டோம் என கூறி அவர்கள் வெளியேறி வருவதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா எலந்தூர் கிராமத்தில்  இரண்டு பெண்கள் 3 பேர் கும்பலால் வெட்டி நரபலி கொடுக்கப் பட்டுள்ளனர். அதில் பலி கொடுக்கப்பட்ட இருவரில், ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் தர்மபுரி மாவட்டம் எருபட்டியை சேர்தவர் பாத்மா (54) ஆவார்.  

இவர் கேரளாவில் கடந்த 18 ஆண்டுகளாக லாட்டரி விற்பனை செய்து வந்தார். மற்றொரு பெண் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஸ்லின் ஆவர். அவரும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்தான். தற்போது மேலும் சில பெண்கள் அங்கு நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது நரபலி விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் இது அச்சத்தையும் மரண பீதியையும்  ஏற்படுத்தியுள்ளது.

Panic of human sacrifice.. Don't want this town.. Tamils who leave Kerala and return to their hometown.

இந்நிலையில் பிழைப்பு தேடி கேரளாவுக்குச் சென்று பல ஆண்டு காலமாக வசித்து வந்தவர்கள் தற்போது அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.  இதை IANS செய்தி நிறுவனம் தமிழகம்  விரும்பியவர்களை நேரடியாக பேட்டி கண்ட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேனியை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணவேணி (36)  கணவர் சுகுமாரனுடன் திருவனந்தபுரத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்திரி வேலை செய்து வந்தார், தற்போது அவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து தேனிக்கு திரும்பியுள்ளனர். அவர்களிடம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் நேரில் பேட்டி கண்டுள்ளது.

அதில் திருவனந்தபுரத்தில் சொந்தவீடுடன் வசித்து வந்தோம், ஆனால் இப்போது நரபலி சம்பவத்தால் நாங்கள் அச்சமடைந்திருக்கிறோம், இனி அங்கு வாழ முடியாது என தெரிந்து விட்டது.

உயிர் பயத்தால் ஊர் திரும்பி விட்டோம். தேனி கம்பதில் ஏதாவது சிறிய வேலைகளை செய்து நாங்கள் பிழைத்துக் கொள்வோம். பாதுகாப்பு இல்லாத இடத்தில் இருப்பதைக் காட்டிலும் சொந்த ஊரில் கூலி வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என வந்து விட்டோம் என தெரிவித்துள்ளனர்.

Panic of human sacrifice.. Don't want this town.. Tamils who leave Kerala and return to their hometown.

இதற்கிடையில் பத்தனம்திட்டாவில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பத்மாவின் குடும்பத்தினர் தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.

பத்மாவின் மூத்தமகன், அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக பணியாற்றும் ஆர்.சேட்டு என்பவர் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பத்மாவின் கணவர் ரங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரி எருபட்டியில் உடல் நலம் குன்றிய நிலையில் வசித்து வருகிறார், விரைவில் பத்மாவுடன் சேர்ந்து வாழ செல்ல இருந்த நிலையில்தான் இந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எருபட்டி கிராமத்திலிருந்து 9 குடும்பங்கள் எர்ணாகுளத்தில் வசித்து வந்த நிலையில், அவர்கள் அனைவருமே தற்போதைய எருபட்டி திரும்பிவிட்டனர். இதேபோல் எர்ணாகுளத்தில் கூலி வேலை செய்து வந்த சுனிதா- மணி (48)  ஐஏஎன்எஸ் செய்தியாளருக்கு பேட்டி கொடுத்துள்ளால், அதில், நான் தர்மபுரியை சேர்ந்தவன் எர்ணாகுளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்,

இதையும் படியுங்கள்: என் மகளைக் கொன்றவனை ஏதாவது செய்யுங்க.. கமிஷனர் காலில் விழுந்து கதறிய சத்யாவின் தாய்..!

இப்போது எனது சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன், கேரளாவில் இருந்து வசதியாக வாழ்வதைவிட சொந்த ஊரில் ஏழையாக இருப்பதே மேல், இந்த இடத்தில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, தெரியாத ஊரில் நாங்கள் கொள்ளப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.

Panic of human sacrifice.. Don't want this town.. Tamils who leave Kerala and return to their hometown.

இதேபோல எர்ணாகுளத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சாந்தி (42) தனது கணவர் சாமிநாதனுடன் கலூர் மார்க்கெட்டில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார், தற்போதைய நரபலி சம்பவத்தால் மீண்டும் அவர் தர்மபுரியில் உள்ள ஈரப்பேட்டைகே திரும்ப உள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் கடந்த 18 ஆண்டுகளாக எர்ணாகுளத்தில் தங்கி வேலை செய்து பிழைத்து வருகிறோம், இந்த நகரம் எங்களுக்கு எல்லா வசதியும் கொடுத்தது, ஆனால் ஒரு தமிழ் பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக நரபலி கொடுத்த இந்த ஊரில் இனியும் எங்களால் இருக்க முடியாது.பாதி சம்பளமோ அரை சம்பளமா சொந்த ஊருக்கே செல்லலாம் என  முடிவு செய்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: பெண் காவல் ஆய்வாளரிடம் டிஎஸ்பி உல்லாசம்; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்மபுரி மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஏராளமான தமிழர்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு பெண்கள் நர பலி கொடுக்கப்பட்ட விவகாரம் மற்றும் பத்தினம்திட்டாவில் 12 பெண்கள் காணாமல் போனது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து குடும்பம் குடும்பமாக தமிழர்கள் ஊர் திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

நன்றி- IANS

 

Follow Us:
Download App:
  • android
  • ios