Asianet News TamilAsianet News Tamil

விளையாட்டை வேடிக்கை பார்க்க வந்த நபர் துடி துடிக்க அடித்து கொலை; போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வாலிபால் விளையாட்டை வேடிக்கை பார்க்க வந்த நபரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

one man killed by ganja addict youngsters in tirupattur district
Author
First Published Aug 4, 2023, 11:17 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கடைத்தெரு பகுதியில் உள்ள சிறு விளையாட்டு மைதானத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் ஜோலார்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மாலை நேரத்தில் வாலிபர்கள் வாலிபால் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் கடைத்தெரு இளைஞர்களும், வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் வாலிபால் விளையாட இருந்தனர். 

இந்த நிலையில் வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த சிண்டு என்கிற மௌரி, டேவிட், அப்பு மற்றும் பிரவீன் ஆகியோர் தலைக்கு மீறிய கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்போது கடை தெரு பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் சூரியா ஆகியோரிடம் கஞ்சா போதையில் இருந்த நான்கு பேரும் வலுக்கட்டாயமாக வம்பு இழுத்து அடித்து தகராறில் ஈடுபட்டு மோதிக் கொண்டனர். இதன் காரணமாக தமிழ்வாணன் மற்றும் சூர்யா இருவரும் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

ஊருக்குள் புகுந்து கடையில் இருந்த வாழைத்தாரை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த காட்டு யானை

பின்னர் அந்த வழியாக வந்த கோபாலகிருஷ்ணன் (வயது 50). இவர் தினமும் மாலை நேரத்தில் சிறிது நேரம் வாலிபால் விளையாட்டை பார்த்து செல்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்றும் கோபாலகிருஷ்ணன் விளையாட்டை வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த நால்வரும் கோபாலகிருஷ்ணனை பார்த்து நீ ஏன் தினமும் இந்த பக்கம் வருகிறாய்? உனக்கு என்ன வேலை? என கேட்டு மீண்டும் வம்பிழுத்துள்ளனர். 

இதனால் சிரித்தவாறு கோபால கிருஷ்ணன் சென்ற நிலையில் கோபமுற்ற நான்கு இளைஞர்களும், நாங்கள் என்ன கேட்கிறோம் நீ ஏன் சிரிக்கிறாய் எனக்கூறி தாங்கள் கையில் வைத்திருந்த மதுபான பாட்டிலை உடைத்து கோபாலகிருஷ்ணன் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

வால்பாறை அருகே தும்பிக்கை இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் வாழ்க்கைக்காக போராடும் யானை

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடனடியாக கோபாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  திருப்பத்தூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை இல்லை என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கூறிவரும் நிலையில் ஜோலார்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் இதுபோல் சம்பவம் நடந்தேறி வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios