Asianet News TamilAsianet News Tamil

பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தையை கடத்திய காம அரக்கர்கள்... புதருக்குள் துடி துடிக்க வெறிச்செயல்...

ரெயில்வே பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த 3 வயது பிஞ்சு பெண் குழந்தையை கடத்திய காம அரக்கர்கள், பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

On CCTV, Child Kidnapped From Jamshedpur Station, Then Raped And Beheaded
Author
Jamshedpur, First Published Aug 1, 2019, 4:38 PM IST

ரெயில்வே பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த 3 வயது பிஞ்சு பெண் குழந்தையை கடத்திய காம அரக்கர்கள், பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்காண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் ரெயில்வே பிளாட்பாரத்தில் கடந்த வாரம் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை நள்ளிரவில் காணாமல் போனது. ஒரு நேரம் போல கண்முழித்த தாய் காணமால் போன தனது பிஞ்சு பெண் குழந்தையை இரவு முழுவதும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை குழந்தையின் தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

இதில், அந்த பெண் தனது நண்பர் ஒருவரை சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் குழந்தை காணாமல் போன அன்று இருந்த சிசிடிவி காட்சிளை கண்டனர்.  இதில், ஒரு நபர் தனது கைகளில் தூங்கும் குழந்தையுடன் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது; சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் மற்றும் அப்பெண் சந்தேகித்த நபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெயில் நிலையத்திலிருத்ந்து 4 கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு  அருகே புதருக்கு பின்னால் இருந்த பிளாஸ்டிக் பையில் பிஞ்சு பெண் குழந்தையின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவாளிகள் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் கழுத்தை நெரித்து பின் தலையை துண்டித்து துடிக்க துடிக்க கொன்றதை  ஒப்புக் கொண்டனர். குழந்தையின் தலையை கண்டுபிடிக்கும் பணியில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆனால், தலை இன்னும் கிடைக்கவில்லை என கூறினர். பிஞ்சு குழந்தையென கூட பார்க்காமல் காம அரக்கர்கள் செய்த இந்த வன்கொடுமை இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios