சொத்துத் தகராறு... நடுரோட்டில் சுற்றி வளைத்து கட்டைகளால் கொடூரமாக தாக்கிய கும்பல்!
தாக்கப்பட்ட நபர் மற்றும் அவர் மீது தாக்குதல் நடத்தியவர்களும் பிரபல ரவுடிகள் என்றும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் சொத்து தகராறு காரணமாக ஒருவரை ஒரு கும்பல் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தாக்கப்பட்ட நபர் மற்றும் அவர் மீது தாக்குதல் நடத்தியவர்களும் பிரபல ரவுடிகள் என்றும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆறு பேர் அந்த நபரை அடித்து உதைத்து, தடிகளால் அடிப்பதை வீடியோவில் காண முடிகிறது. அவரது மனைவி கைகளை கூப்பியபடி நிறுத்துமாறு கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் டெல்லியின் நரேலாவில் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை வெறியுடன் தாக்கிய குற்றவாளிகள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர் என்றும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
பட்ஜெட் 2024: மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்?