வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்ற மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக்  கொன்ற மருமகள், தடுக்க வந்த மாமியாரையும் அடித்துக் கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர். 

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம்,  ஜமகண்டி தாலுகா ஜம்பகிகேடி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராய மல்லேஷ்வரா, மனைவி கலாவதி. இவர்களின் மருமகள் கீதா. இந்நிலையில்  கீதாவுக்கு அவருடைய மாமனார் தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரூமில் துணி மாற்றிக்கொண்டிருந்த பொது திடீரென உள்ளே புகுந்து கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் மனதளவிலும், உடலாலும் பாதிக்கப்பட்ட கீதா இது குறித்து கணவரிடம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். 

மகனும் தன்னை எதுவும் கேட்கவேயில்லை,  இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட மாமனார், அடிக்கடி  கீதாவுக்கு கற்பழிக்கும் நோக்கத்திலேயே கண்டா இடத்தில் தொட்டும், பலவந்தமாக கட்டிப்பிடிப்பதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீதாவை கற்பழிக்க முயற்சி செய்த சித்தராயாவின் வெறியால்,  ஆத்திரமடைந்த கீதா, வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனாரின் தலையில் ஓங்கி வெறித்தனமாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த சித்தராயா அலறி துடித்தபடி  கீழே விழுந்தார். 

கணவனின் அலறல் சத்தம் கேட்ட மாமியார் கலாவதி வீட்டுக்குள  வந்து கீதாவை தடுக்க முயற்சித்தார். இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த கீதா,  மாமியாரையும் கொடூரமாக தாக்கினார். இதில் மாமனார், மாமியார் இருவரும் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த  சவலகி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றி அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக  விசாரணை நடத்தினர். 

அப்போது மாமனாரின் தொடர் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை, சில நேரங்களில் வீட்டில் யாரும் இல்லை என்றால் என்னை கட்டிப்பிடித்துவிடுவார். நாளுக்கு நாள் அவரின் தொல்லை தாங்கமுடியாததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும், தடுக்க வந்த மாமியாரையும்  தீர்த்துக்கட்டியதாகவும் கீதா தெரிவித்தார். இதையொட்டி கீதாவை கைது  செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர். அதிபயங்கர கொலை சம்பவம் ஜம்பகிகேடி கிராமத்தில் பெரும்  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.