அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் நர்ஸ் பிரசவம் பார்த்தபோது குழந்தையின் தலை தனியே துண்டானது, மற்ற உடல் பாகங்கள் தாயின் வயிற்றில் சிக்கிக்கொண்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே கடலூர் காலனியைச் சேர்ந்தவர் பொம்மி . கர்ப்பிணிப் பெண்ணான இவருக்கு, நேற்றிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கர்பிணி பெண் பொம்மியை கூவத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் டாக்டர் இல்லாததால் பணியிலிருந்த நர்ஸ் முத்துகுமாரி பிரசவம் பார்த்துள்ளார்.

குழந்தை முழுமையாக வெளியே வருவதற்கு முன்பே, செவிலியர் குழந்தையின் தலையை மட்டும் பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதில், குழந்தையின் தலை துண்டானது, குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் தாயின் வயிற்றில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து, பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் பாகங்கள் பொம்மியின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது. தற்போது, அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் டாக்டர் இல்லாத நிலையில் நர்ஸ் பிரசவம் பார்த்ததால்தான் தங்களது குழந்தையைப் பறிகொடுத்துள்ளோம் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உறவினர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதால் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நர்ஸ் முத்துகுமாரியிடம் கூவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஹெபோல ராஜஸ்தானில் கடந்த ஜனவரி மாதம்  டாக்டர் இல்லாமல், நர்ஸ் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தபோது குழந்தையின் காலைப்பிடித்து இழுத்ததால் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.