வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வடமாநில இளைஞர் கைது… 2 கிலோ கஞ்சா செடி பறிமுதல்!!

கோவையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வட மாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். 

north indian youth arrested for growing ganja plant at home in coimbatore

கோவையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வட மாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செரயாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடிகள்  வளர்த்து வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செரையாம்பாளையம் பகுதியில் போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கோவையில் கழுத்தை நெறித்த கடன் தொல்லை; காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

அப்போது, அங்கிருந்த ஒரு வீட்டின் அருகே காலி இடத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து கஞ்சா செடியை வளர்த்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த இளைஞரை காவல்துரையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த பிண்டு கேவட்  என்பதும், செரயாம்பாளையத்தில் வீடு எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல்; 15 பேர் காயம்

மேலும் வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா செடியினை வளர்த்து தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா செடியினை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios