Asianet News TamilAsianet News Tamil

பாலியல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை… பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேர்ந்த மருத்துவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். 

no action was taken despite filing a sexual complaint victim complains at sp office
Author
Thoothukudi, First Published Jul 12, 2022, 10:01 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேர்ந்த மருத்துவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி கிருஷ்ணா. இவர் கோவில்பட்டியில் உள்ள பிரபல மருத்துவமனையான முரளி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துள்ளார். அப்போது அங்கே இருந்த மருத்துவர் முரளி செவிலியர் ஜெயந்தி கிருஷ்ணாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அட கொடுமையே... இளம்பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞன்... கதி என்ன ஆச்சு பாருங்க..

no action was taken despite filing a sexual complaint victim complains at sp office

இது தொடர்பாக கடந்த 23.5.2022 அன்று பாதிக்கப்பட்ட ஜெயந்தி கிருஷ்ணா கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் முரளி மீது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர் முரளியை இதுவரை கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் காதல் லீலை..10ம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து கதற வைத்த வாலிபர்

no action was taken despite filing a sexual complaint victim complains at sp office

மேலும், மருத்துவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவர் முரளி தனது மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வருவதாகவும் அவருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் கூறி பாதிக்கப்பட்ட பெண் ஜெயந்தி கிருஷ்ணா தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். மேலும் தன்னை போன்று பல பெண்களை மருத்துவர் முரளி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து முரளியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios