பொதுவாகவே நித்யானந்தா தங்கத்தை அணிந்து கொண்டு ஆடம்பரமாக இருப்பதை விரும்புபவர். தனது சிஷ்யைகள் வீடியோ வெளியிடும் போதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்த படி வீடியோ வெளியிட வைப்பார். அப்படிப்பட்ட நித்யானந்தா 6 டன் தங்கத்தை கைலாசா நாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

தம் மீது வழக்குகள் உள்ளதால் 2014ம் ஆண்டே ஈகுவடார் அருகில் உள்ள தீவிற்கு சென்று விட்டார் நித்யானந்தா. அங்கேயே இருக்கும் அவர் தற்போது அரசாங்கத்தையும் உருவாக்கி விட்டார். சரி ஒரு நாட்டை உருவாக்கக் கூடிய அளவிற்கு பணம் எப்படி கிடைத்தது? நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் துலாபாரம் நிகழ்ச்சி ஆண்டுக்கு நான்கு முறை நடக்குமாம். அப்போது நித்தியானந்தாவின் எடைக்கு நிகரான தங்கத்தை பக்தர்கள் வழங்குவர்.

இதுவரை அப்படிப் பெறப்பட்ட நகைகளின் எடை மட்டுமே ஆறு டன் எனக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பகுதி இப்போது நித்தியானந்தாவின் தீவுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது எனக் கூறுகிறார்கள்.