தமிழ்நாட்டில் இருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. சாமியாரான இவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் அமைத்து உள்ளார். பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும் இவரிடம் பல இளம்பெண்கள் சீடர்களாக இருக்கிறார்கள். இவரது ஆசிரமம் மீது தொடர்ச்சியாக குற்றசாட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அவர் மீது பாலியல் புகார், இளம்பெண்கள் கடத்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் அவரோ அவ்வப்போது சில காணொளிகளை வெளியிட்டு சர்சைககளுக்கு வித்திட்டு வருகிறார்.

இந்தநிலையில் தற்போது நித்யானந்தா மீது மேலும் ஒரு குற்றசாட்டை அவரது முன்னாள் சீடர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். தஞ்சை,திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஆசிரமங்களை நிர்வகித்த விஜயகுமார் என்பவர் நித்தியானந்தா தன்னை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியாக பரபரப்பை கிளப்பி இருக்கிறார். ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமங்களை அம்பலப்படுத்தியதால் நித்தியானந்தாவின் சீடர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நித்தியானந்தாவின் மோசடி குறித்த பல முக்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை மறைக்கவே தற்போதைய சீடர்கள் தம் மீது குற்றசாட்டுகள் சுமத்துவதாக கூறியுள்ளார். ஒவ்வொரு குற்றசாட்டுக்கும் வீடியோவில் சம்பந்தமில்லாமல் விளக்கமளித்து வரும் நித்யானந்த சாமியார், இந்த குற்றசாட்டுக்கும் ஏதாவது வித்தியாசமாக விளக்கமளிப்பார் என நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.