25 நாட்களில் கசந்து போன திருமண வாழ்க்கை.. கணவனை போட்டு தள்ள கூலிப்படையை ஏவிய மனைவி.. இறுதியில் நடந்தது என்ன?
கவுதம் மனைவி புவனேஸ்வரிக்கு விருப்பமில்லாமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால், அவரை கொலை செய்ய புவனேஸ்வரி முடிவு செய்துள்ளார்.
திருமணமான 3 வாரங்களில் கணவரை கொலை செய்ய ஏற்பாடு செய்த விஷயம் வெளியே தெரிந்ததால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம், உலகத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் (24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (21) கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த 2ம் தேதி புதுமணத் தம்பதிகள் தம்மணம்பட்டி பகுதியில் உள்ள தொட்டிப்பாலத்தை பார்க்க ஸ்கூட்டியில் சென்றனர். திரும்பி வரும்போது ஸ்கூட்டி பழுதாகியுள்ளது. அப்போது பின்னால் வந்த கார், கவுதம் மீது மோதுவதுபோல் வந்துள்ளது. இதில், மயிரிழையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், காரில் வந்தவர்கள் கவுதமை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க;- 'உல்லாச வீடியோவை கணவருக்கு அனுப்பி விடுவேன்'.. பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த காவலர் கைது.!
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இது தொடர்பாப கவுதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கவுதம் மீது காரில் மோத வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில், 2 சிறுவர்களும் அடங்குவர். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
இதையும் படிங்க;- டுட்டோரியல் காலேஜில் வைத்து உல்லாசம்.. பாஸ் பண்ண வைப்பதாக கூறி 17 வயது மாணவியை மாசமாக்கிய ஆசிரியர்..!
இதையும் படிங்க;- தினமும் மட்டையாக்கிவிட்டு நண்பனின் மனைவியுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் கொலை.. 4 ஆண்டுகளுக்கு பிறகு சடலம் மீட்பு
கவுதம் மனைவி புவனேஸ்வரிக்கு விருப்பமில்லாமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால், அவரை கொலை செய்ய புவனேஸ்வரி முடிவு செய்துள்ளார். கடந்த 2ம் தேதி இது குறித்து தனது நண்பர் நிரஞ்சன் ராஜாவிடம் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். இதன்படி, அவர் உட்பட 6 பேரும் தொட்டிப்பாலம் சென்று திரும்பிய கவுதமை கார் ஏற்றி கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் சிக்கியதால், தாமும் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் கடந்த 8ம் தேதி புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான நிரஞ்சன் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.