தினமும் மட்டையாக்கிவிட்டு நண்பனின் மனைவியுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் கொலை.. 4 ஆண்டுகளுக்கு பிறகு சடலம் மீட்பு
ஆத்திரமடைந்த மணி திருப்பதியை ஜவ்வாதுமலை அடிவாரத்திற்கு மது குடிக்க அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது, மணி தனக்கு அதிக போதை ஏற்பட்டு மயங்கி விழுந்ததுபோல் நடித்துள்ளார். இதனால், திருப்பதி அங்கிருந்து மணியின் வீட்டுக்கு சென்று சவுந்தரியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாராம்.
மனைவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த கள்ளக்காதலனை வெட்டிக்கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தொழிலாளி 4 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை தாலுகா ஜம்னாமரத்தூர் அருகே பலாக்கனூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மணி(32) கூலித்தொழிலாளி. முதல் மனைவி இறந்துவிட்டதால் பெருங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரி(28) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மணியின் நண்பர் வீரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி(41). இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பார்களாம். மேலும், திருப்பதி மணியன் வீட்டுக்கு அடிக்கடி வருவாராம்.
இந்நிலையில், திருப்பதிக்கும் மணியன் மனைவி சவுந்தரிக்கும் நட்பு ஏற்பட்டு இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் மணிக்கு தெரியவந்ததையடுத்து இருவரையும் எச்சரித்துள்ளார். இருப்பினும் அவர்கள் கள்ளத் தொடர்பை விடமால் தொடர்பில் இருந்து வந்து உள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த மணி திருப்பதியை ஜவ்வாதுமலை அடிவாரத்திற்கு மது குடிக்க அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது, மணி தனக்கு அதிக போதை ஏற்பட்டு மயங்கி விழுந்ததுபோல் நடித்துள்ளார். இதனால், திருப்பதி அங்கிருந்து மணியின் வீட்டுக்கு சென்று சவுந்தரியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாராம்.
இதனிடையே, திருப்பதியை பின்தொடர்ந்து வந்த மணி அங்கு இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். அங்கிருந்த அரிவாளை எடுத்து திருப்பதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அந்த சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் திருப்பதி துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்த சவுந்தரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், திருப்பதியின் சடலத்தை அருகில் உள்ள தோட்டத்தில் புதைத்துவிட்டு மணி தலைமறைவானார்.
இது தொடர்பாக ஜம்னாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணியை கடந்த 4 ஆண்டுகளாக தேடிவந்தனர். இந்ந்லையில், பெங்களூருவில் மணி இருப்பதை அறிந்த போலீசார் நேற்று அங்கு சென்று கைது செய்து போளூருக்கு அழைத்து வந்தனர். பின்னர், திருப்பதியின் சடலத்தை தோண்டி எடுத்தனர். அங்கு கிடைத்த எலும்புக்கூடுகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.