முன்விரோதம் காரணமாக புதுமாப்பிள்ளைக்கு சரமாரி அரிவாள் வெட்டு; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முன்விரோதம் காரணமாக புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிய வாலிபர் மீது மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 58) விவசாயி. இவருடைய மகன் பவித்ரன்(27). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார் மகன் ஜெயமணி (32). இவருக்கும் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கார்த்திக் பவித்ரனிடம், ஜெயமணியை பற்றி விசாரித்தாக கூறப்படுகிறது. தன்னை பற்றி பவித்ரனிடம் தான் கார்த்திக் விசாரித்து இருக்க வேண்டும் என்று எண்ணிய ஜெயமணி கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி இரவு 11 மணியளவில் பவித்ரன் வீட்டிற்கு சென்று கார்த்திக்கிடம் ஏன் எனது செல்போன் எண்ணை கொடுத்தாய் என அவரை திட்டி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியுள்ளார். இதில் பவித்ரன் பலத்த காயமடைந்தார்.
புளி பறிப்பதில் உடன் பிறப்புகளிடையே மோதல்; தம்பி கொலை
இதனை தடுக்க வந்த பவித்ரனின் தந்தை பாலசுப்பிரமணியனையும் கத்தியால் தாக்கியதில், தந்தை, மகன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவித்ரன் சேர்க்கப்பட்டார்.
நாமக்கல்லில் தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு
இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து ஜெயமணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஜெயமணி மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவித்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பெரியசாமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.