புளி பறிப்பதில் உடன் பிறப்புகளிடையே மோதல்; தம்பி கொலை
அரியலூர் மாவட்டத்தில் புளிய மரத்தில் புளி பறிப்பதில் அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட. தகராறில் அண்ணன் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த தம்பி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் ஏற்கனவே இட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது புளி பறிக்கும் காலம் என்பதால் சங்கருக்கு சொந்தமான இடத்தில் உள்ள புளியமரத்தில் ராஜேந்திரன் குடும்பத்தினர் புளி பறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சங்கர் மற்றும் ராஜேந்திரன் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
காரில் கடத்தி 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற கும்பல்: கிராம மக்கள் போராட்டம்
இதில் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கவுண்டன், கவிதா ஆகிய மூவரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சங்கர் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.
இன்ஸ்டா காதலால் சீரழிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி; 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது