திருமணமான 5வது நாளில் இளம்பெண் ஆணவக்கொலை? நடந்தது என்ன.. வெளியான பகீர் தகவல்..!
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள துப்பாக்குடி கிராமத்தின் அருகில் உள்ள ஓர் ஓடையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல் கிடந்தது. இதனை அவ்வழியாக சென்றவர் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருமணமான 5வது நாளில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஓடையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள துப்பாக்குடி கிராமத்தின் அருகில் உள்ள ஓர் ஓடையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல் கிடந்தது. இதனை அவ்வழியாக சென்றவர் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார்த்த போது உடலில் வெட்டுக் காயங்கள் இருந்ததால் கொலை என்பது உறுதியானது.
இதையும் படிங்க;- அடச்சி.. குடிபோதையில் ஒரு அப்பன் பொண்ணு கிட்ட செய்ற வேலையை இது.. கருமம் கருமம்..!
இதனையடுத்து, இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டவர் நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகள் இசக்கி செல்வி என்பது தெரியவந்தது.
இசக்கி செல்விக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மறுநாள் அவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதிகாலையில் வேறொரு நபருடன் சென்று திருமணம் செய்துகொண்டார். இதற்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், புதுமண தம்பதி உறவினர்கள் வீட்டில் தங்கினர். இந்நிலையில், இசக்கி செல்விக்கும் கணவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சண்டை போட்டுக் கொண்டு இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறி நிலையில் உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் துப்பாக்குடி ஓடையில் சடலமாக கிடந்தார்.
அவரைக் கொலை செய்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இசக்கி செல்வியின் திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர்களிடமும் விசாரணை நடக்கிறது. கொலை நடந்த இடத்தின் அருகில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் கிடந்துள்ளது. அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இதையும் படிங்க;- 23 வயது இளைஞருடன் 3 குழந்தைகளின் தாய் கள்ளக்காதல்! வேப்ப மரத்தில் இருவரும் என்ன செய்தார்கள் தெரியுமா?